அவிநாசி ஐயப்பன் கோவிலில் விரதம் இருந்து மாலை அணிந்த பக்தர்கள்
ADDED :6 minutes ago
அவிநாசி; அவிநாசி மற்றும் சேவூரில் உள்ள ஐயப்பன் கோவிலில் கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு விரதம் இருந்து ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்தனர். அவிநாசி சேலம் கொச்சின் பைபாஸில் உள்ள ஸ்ரீ ஐயப்பன் கோவிலில் கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு ஐயப்ப பக்தர்கள் விரதம் இருந்து மாலை அணிந்தனர். மாலை அணிந்த பக்தர்களுக்கு கோவில் குருசாமி பிரகாஷ்,பிரசாதங்கள் வழங்கினார். சேவூர் ஸ்ரீ பால சாஸ்தா ஐயப்பன் கோவிலில் ஸ்ரீ தர்மசாஸ்தா டிரஸ்ட் சார்பில் கார்த்திகை முதல் நாளை முன்னிட்டு விரதம் இருந்த பக்தர்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டது.