உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை தீப திருவிழா தடங்கலின்றி நடக்க வேண்டி துர்க்கையம்மன் உற்சவம்

திருவண்ணாமலை தீப திருவிழா தடங்கலின்றி நடக்க வேண்டி துர்க்கையம்மன் உற்சவம்

திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழா இனிதே நடைபெற வேண்டி, நகர காவல் தெய்வமான துர்க்கையம்மன் உற்சவம் நடத்தப்பட்டு, அம்மன் வீதி உலா வந்து  பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், வரும், 24ம் தேதி தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி, டிச., 3ல், அதிகாலை  கோவிலில் பரணி தீபம் மற்றும், மாலை, 6:00 மணிக்கு 2,668 அடி உயர மலை உச்சியில் மஹா தீபமும் ஏற்றும் விழா நடக்க உள்ளது. இதை முன்னிட்டு விழா இனிதே நடக்க வேண்டியும், விழாவை காண வரும் பக்தர்களுக்கு எவ்வித அசம்பாவிதமும், இடையூறும் ஏற்படாமல் இருக்க வேண்டி, நகர காவல் தெய்வமான துர்க்கையம்மனுக்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு விழா எடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து, துர்க்கையம்மன், காமதேனு வாகனத்தில் அலங்கரிக்கப்பட்டு, மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது, பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தி வழிபட்டனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !