உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சீரடி சாயிபாபா கோவிலில் முதல்வர், அமைச்சர் தரிசனம்!

சீரடி சாயிபாபா கோவிலில் முதல்வர், அமைச்சர் தரிசனம்!

கிருமாம்பாக்கம்: சீரடி சாயிபாபா கோவிலில் முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் ராஜவேலு ஆகியோர் தரிசனம் செய்தனர்.கடலூர் சாலை கிருமாம்பக்கம் சந்திப்பில் சீரடி சாயிபாபா கோவில் உள்ளது. இங்குப் புத்தாண்டையொட்டி நேற்று காலை 7 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், ஆரத்தியும் நடந்தது.விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் ராஜவேலு கலந்து கொண்டு சாயி பாபாவை தரிசனம் செய்தனர். தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கிருமாம்பாக்கம் மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.மாலை சாயி பஜனை நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சாய் சீரடி பாபா டிரஸ்ட் நிறுவனர் ரகு செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !