ஐயப்பன் கோவிலில் லட்சார்ச்சனை பூஜை
ADDED :4664 days ago
குமாரபாளையம்: குமாரபாளையம் அம்மன் நகர் ஐயப்பன் கோவிலில், அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில், 15ம் ஆண்டு லட்சார்ச்சணை மற்றும் தீப திருவீதி உலா நடந்தது. நகராட்சி சேர்மன் தனசேகரன் தலைமை வகித்தார். இன்ஸ்பெக்டர் சாந்தமூர்த்தி, துணைச் சேர்மன் பாலசுப்ரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து ஐயப்ப சேவா சங்கம் சார்பில், லட்சார்ச்சணை பூஜை நடந்தது. மேலும், ஸ்வாமிக்கு பல்வேறு சிறப்பு அபிஷேக பூஜை நடந்தது. முன்னதாக நடந்த தீபத் திருவீதி உலாவை தனியார் கல்வி நிறுவன தாளாளர் செந்தாமரை துவக்கி வைத்தார். ஐயப்ப சேவா மண்டபத்தில் துவங்கிய தீப உலா நகரின் முக்கிய சாலைகள் வழியாக வந்து, கோவிலை அடைந்தது. ஐயப்ப சேவா சங்க தொண்டர்படை தலைமை தளபதி ஜெகதீஷ், சங்க செயலாளர் விஜயகுமார், பொருளாளர் தேவராஜ் உட்பட பலர் பங்கற்றனர்.