பைரவர் ஆடையின்றி இருப்பது ஏன்?
ADDED :4697 days ago
பைரவருக்குத் திகம்பரர் என்ற பெயர் உண்டு, திக் அம்பரர் என்பதே திகம்பரர். திக் என்றால் திசை. அம்பரம் என்றால் ஆடை. திசைகளையே ஆடையாக அணிந்தவர் என்பது பொருள். அதனால், நம் ஊனக்கண்கள் கொண்டு அவரைப் பார்க்கக்கூடாது. அவரும் திசை ஆடை அணிந்தவர் தான். ஜைனர்களிலும் இப்படி ஒரு பிரிவினர் இருக்கிறார்கள்.