ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா; இராப்பத்து உற்சவம்.. வேத பாராயணம் துவக்கம்
ஸ்ரீரங்கம்: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், 108 திவ்ய தேசங்களில் முதலாவதாக உள்ளது. ஆண்டுதோறும், ஸ்ரீரங்கம் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். நேற்று அதிகாலைசொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. அதனை தொடர்ந்து வைகுண்ட ஏகாதசி (இராப்பத்து) வைபவங்கள் துவங்கியது.
வைகுண்ட ஏகாதசிஅன்று, அரங்கனுக்கு வழக்கம் போல், அதிகாலையில் நடை திருப்பள்ளி யெழுச்சி,ஆன பிறகு, வேத பாராயணம் தொடங்கும். திருவரங்க வேத பாராயணம்: அரையர்கள் ஆழ்வார்கள் அருளிச்செயல் பாடுவதற்கு, கருவறையில் பெரியபெருமாள் சந்நிதியில் திருநெடுந்தாண்டகம் சேவித்து தொடங்குவது போல,இந்த ஆண்டு,முழுதும் விண்ணப்பிக்கப் படும் வேத பாராயணத்துக்கு தொடக்கமாக, இன்று ஸ்ரீ பராசர/வேத வியாச பட்டர் ஸ்வாமி பெரிய பெருமாள் சந்நிதியில் வேத பாராயணம் செய்து தொடங்கி வைத்தார். இன்றைய பெரிய கோயில் முறைகார பட்டர்--வேத வியாச வம்சத்தில் கைங்கர்யம் செய்யும் ஸ்வாமிகள்--அவர்களின் திருமாளிகையில்,இருந்து,
கோவில்கைங்கர்யபரர்களால், கோவில் மரியாதைகளுடன், மஹா வைபவத்தோடு அழைத்து வரப்பட்டார்.
பட்டர் கோயிலின் உள்ளே எழுந்தருளியவுடன், ஆரியபடாள்வாசல் கதவுகள் மூடப்படும்.நம்பெருமாள் பரமபத வாசலைக்கடந்த பிறகே, மீண்டும் ஆரியபட்டாள் வாசல்கதவுகள் திறக்கப்படும். பட்டர் சந்தனு மண்டபத்தின் அருகில் அமர்ந்து இருப்பார்.கோயில் மணியகாரர் பட்டரை,சாஷ்டாங்க மாக நமஸ்ஹரித்து எழுந்தருளப் பண்ணுவார்."ஸ்தாநீகர்"கர்பக்ருஹத்தில் இருந்து, பட்டர்ஸ்வாமிக்கு, அருளப்பாடு சாதிப்பார்.பட்டர் உள்ளே எழுந்தருளி ஸ்தானிகர் கையில் ஒரு தேங்காயும்,ஒரு பணத்தையும் கொடுத்து விட்டு, தண்டம் சமர்ப்பிப்பார்.பட்டருக்குத் தொங்கு பரியட்டம் மரியாதை வழங்கப் படும்.
கிருஷ்ண யஜூர் வேதம் கிருஷ்ண யஜூர்வேத முதல் பஞ்சாதியை(பத்தி) சேவிப்பார். பெரிய பெருமாள் யஜுர்வேதபரர் ! ஆதலால் யஜுர் வேதம் விண்ணப்பித்து தொடங்கப் படுகிறது. அதன்பிறகு,ரிக் வேதம்,
யஜூர் வேதம்,சாம வேதம்,சந்தஸ் சாமம், அதர்வண வேதம்,சுக்ல யஜூர்வேதம், ஏகாயன சாகை,ஆகியவற்றிற்குத் தனித்தனியாக அருளப்பாடு ஆகி வேத அங்கபூதர்களான பிற வேத பாராயணக்காரர்கள் அவற்றை விண்ணப்பிப்பார்கள்.அவர்கள் உள்ளே போகாமல் வெளியிலிருந்தே விண்ணப்பம் செய்வார்கள். பிறகு அரையர்கள்,கர்ப க்ருஹத்தின் முன்னால்சென்று,"திருவாய்மொழி" முதல் பாசுரமான,"உயர்வற உயர்நலம் உடையவன்" என்னும் பாசுரத்தினைச் சேவிப்பார்கள். பெரிய பெருமாளுக்குத் திருவா ராதனம் ஆகித் தளிகை அமுது செய்யும் போது,வேத பாராயணத் தளிகையும் அமுது செய்து பட்டர் கோஷ்டிக்கு விநியோகமாகும்.
நம்பெருமாள் கர்ப்பகிரகத்திலிருந்து புறப்பட்டு(விவரங்கள் அடுத்த பதிவில்) துரை பிரதக்ஷிணத்தில் உள்ள துரை மண்டபத்தில் எழுந்தருள்வார். அங்கு முறைக்கார வேதவியாச பட்டருக்கு, அருளப்பாடு ஆகி,"கிருஷ்ண யஜூர்"வேதம் 8 ஆம் பிரஸ்னம் பாக்கியுள்ள பஞ்சாதிகள் விண்ணப்பித்து சாற்றுமறை ஆகும். இதே போல வேத அத்யயன உற்சவத்தின் பத்து நாட்களிலும் சில பிரஸ்னங்கள் விண்ணப்பம் செய்யப்படும். இன்றிலிருந்து,இந்த இராப்பத்து உற்சவத்தின் அனைத்து நாட்களிலும், முறைக்கார பட்டருக்கு மட்டுமே,துரை மண்டபத்தில் தொங்கு பரியட்டம் கட்டப்படும். மற்ற வேதங்களை சாற்றுமறை செய்வோருக்கு,பரியட்டம் கட்டப்படுவது இல்லை.
அனைவருக்கும் தீர்த்தம்,சந்தனம், விடாய்ப்பருப்பு வழங்கப்படும். பஞ்ச முத்திரை மரியாதை இரவு நம்பெருமாள் மூலஸ்தானம் சென்று சேர்ந்ததும், வேத விண்ணப்பம் செய்த,தமது ஸ்வீகார புத்திரன் வேத வியாச பட்டருக்கு சிறப்பாக"பஞ்சமுத்திரை" சடாரி சாதித்து அருள்கிறார்.