உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கடையூர் கோவிலில் தனுர் மாதம், ஆங்கில புத்தாண்டு சிறப்பு பூஜை; தருமபுரம் ஆதீனம் தரிசனம்

திருக்கடையூர் கோவிலில் தனுர் மாதம், ஆங்கில புத்தாண்டு சிறப்பு பூஜை; தருமபுரம் ஆதீனம் தரிசனம்

மயிலாடுதுறை: திருக்கடையூர் கோவிலில் தனுர் மாதம், ஆங்கில புத்தாண்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தருமபுரம் ஆதீனம் தரிசனம் செய்தார்.


மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது.  தேவார பாடல் பெற்ற கோவிலில் சிவபெருமான் மார்க்கண்டேயருக்காக எமனை வதம் செய்ததால் அட்டவிரட்ட தளங்களில் ஒன்றாக திகழ்கிறது. இக்கோவிலில் ஹோமம் செய்து சுவாமி அம்பாளை வழிபட்டால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது ஐதீகம். சிறப்பு வாய்ந்த கோவிலில் தனுர் மாதம் மற்றும் ஆங்கில புத்தாண்டை யொட்டி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. தருமபுரம் ஆதீனம்  27-வது குருமாக சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் கோ பூஜை கஜ பூஜை செய்து அமிர்தகடேஸ்வரர், கால சம்ஹார மூர்த்தி, அபிராமி சன்னதிகளில் தரிசனம் செய்தார். முன்னதாக கோவிலுக்கு வந்த குருமஹா சன்னிதானத்தை மங்கல இசை முழங்க பூரண கும்பம் கொடுத்து சிவாச்சாரியார்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் வரவேற்றனர்,  ஆங்கில புத்தாண்டை யொட்டி  வெளி மாநிலம், மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் குவிந்ததால் கூட்டம் அலை மோதியது. நெரிசலை கட்டுப்படுத்த போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !