திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் திருநாகேஸ்வரருக்கு வருடாபிஷேகம்
ADDED :5 days ago
திருப்புத்தூர்;திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் திருநாகேஸ்வரருக்கு வருடாபிேஷகம் நடந்தது.
குன்றக்குடி தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் யோகபைரவர் சனன்திக்கு முன்பாக கிழக்கு நோக்கி தனி சன்னதியில் திருநாகேஸ்வரர் எழுந்தருளியுள்ளார். இவருக்கு ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் அபிஷேக,ஆராதனைகள் நடைபெறுகிறது. வருடாபிசேகத்தை முன்னிட்டு சிறப்பு யாகம் நடந்தது. கோயில் மகாமண்டபத்தில் மாலை 4:30 மணிக்கு ரமேஷ்குருக்கள் உள்ளிட்ட சிவாச்சார்யர்களால் யாகசாலை பூஜைகள் துவங்கின. பூர்ணாகுதி தீபாராதனைக்கு பின்னர் யாகசாலையிலிருந்து கலசங்கள் புறப்பாடாகி மூலவர் திருநாகேஸ்வருக்கு அபிஷேகம் நடந்தது. பின்னர் அலங்காரத்தில் அருள்பாலித்த திருநாகேஸ்வருக்கு தீபாராதனை நடந்தது.