பழநியில் ராதா மாதவ கல்யாண உற்ஸவம்
ADDED :6 days ago
பழநி; பழநியில் தமிழ்நாடு பிராமண ஸமாஜம் சார்பில் ஸ்ரீ ராதா மாதவ கல்யாண உற்ஸவம் நடைபெற்றது.
பழநியில் தமிழ்நாடு பிராமண ஸமாஜம் சார்பில் 40 ஆம் ஆண்டு ராதா மாதவ கல்யாண உற்சவம் நடைபெற்றது. ஜன.3., காலை 10:30 மணிக்கு ஸ்ரீ கீத கோவிந்த அஷ்டபதி பாராயணம், மாலை 6:00 மணிக்கு ஸஹஸ்ரநாம அர்ச்சனை, மாலை 7:30 மணிக்கு திவ்ய நாம பஜனை நடைபெற்றது. நேற்று (ஜன.4.,) காலை 7:30 மணிக்கு உஞ்சவிருத்தி, காலை 8:30 மணி முதல் பகல் 1:00 மணி வரை ஸ்ரீ ராதா மாதவ கல்யாண உற்ஸவம் நடைபெற்றது. பகல் 1:00 மணிக்கு ஆஞ்சநேய உற்ஸவம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தமிழ்நாடு பிராமண ஸமாஜ தலைவர் ஹரிஹரமுத்துஅய்யர் மற்றும் சவுந்தர்ய மண்டலி, மாதுஸ்ரீ பொன்னுலட்சுமி அம்மாள் அபிஸ்மாரக ஸமதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.