உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் /  நாகேஸ்வர சுவாமி கோவிலில் 17ம் நுாற்றாண்டு கல்வெட்டு கண்டெடுப்பு

 நாகேஸ்வர சுவாமி கோவிலில் 17ம் நுாற்றாண்டு கல்வெட்டு கண்டெடுப்பு

திருப்பூர்: தாராபுரம் அருகே ஏரகாம்பட்டியில் நாகேஸ்வர சுவாமி கோவிலில், ஆய்வாளர்கள் பூபாலன், உத்திராடம் ஆகிய இருவரும், ஆய்வு செய்தனர். அதில், ஐந்து அடி உயர கல்வெட்டை கண்டெடுத்தனர். கல்வெட்டின் மேற்பகுதியில் நின்ற கோலத்தில் ஒரு காளையும், அதன் கீழ், வட்ட வடிவமான ஒரு இலச்சினையும் அமைந்துள்ளது. வட்டத்தின் உள்பகுதியில் இரு கோடுகள் உள்ளதும், வட்டத்தின் கீழ்ப்பகுதியில் இரு வரிகளில் கன்னிவூர் சவுப்பன் என பொறிக்கப்பட்டிருந்தது. கல்வெட்டு ஆய்வாளர்கள் கூறுகையில், ‘இந்த கல்வெட்டு மேய்ச்சல் நிலம், குளக்கரை போன்ற நீர் நிலைகளில் காணப்படும். மேய்ச்சலுக்கு கொண்டு செல்லப்படும் கால்நடைகள், உடலில் ஏற்படும் அரிப்பை இந்த கல்லில் உராய்ந்து போக்கிக்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !