பஞ்சவடீ கோவிலில் பாலாபிஷேகம்!
ADDED :4734 days ago
புதுச்சேரி: பஞ்சவடீ பஞ்சமுக ஆஞ்ஜநேய சுவாமிக்கு, 6ம் தேதி பால் அபிஷேகம் நடக்கிறது. திண்டிவனம்-புதுச்சேரி நெடுஞ்சாலையில் பஞ்சவடீயில் அமைந்துள்ள, 36 அடி உயர விஸ்வரூப ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்ஜநேய சுவாமிக்கு, ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக் கிழமையன்று, பால் அபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம். இம்மாதத்தின் முதல் ஞாயிற்றுக் கிழமையான, 6ம் தேதி மாலை 4.30 மணிக்கு, பால் மற்றும் வாசனை மங்கள திரவியங்கள் கூடிய திருமஞ்சனம் நடக்க உள்ளது. விழா ஏற்பாடுகளை பஞ்சமுக ஸ்ரீ ஜெயமாருதி சேவா டிரஸ்ட்டின் நிர்வாகிகள் செய்துள்ளனர்.