திருப்பரங்குன்றம் தர்ம சாஸ்தா கோயிலில் மண்டல பூஜை
ADDED :10 hours ago
திருப்பரங்குன்றம்; ஹார்விபட்டி சந்திராபாளையம் தர்ம சாஸ்தா கோயிலில் 56வது மண்டல பூஜை, 38வது ஆண்டு பூ மிதித்தல் விழா டிச. 21ல் சுவாமிகளுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தினம் மூலவர்களுக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. நேற்று முன்தினம் மூலவர்கள் அரச மர விநாயகர், பதினெட்டாம்படி கருப்ப சுவாமி, ஆதி சொக்கநாதர், நந்தீஸ்வரர், காலபைரவர், நவக்கிரகங்கள், மஞ்சமாதா, தர்ம சாஸ்தாவிற்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் முடிந்து தீபாராதனை நடந்தது. பின்பு கன்னி பூஜை முடிந்து, பூ மிதித்தல் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிர்வாகிகள் பாலசுப்ரமணியன், மணிகண்டன், சுப்புராமன், ஜெமினி, அன்பு செழியன், சக்திவேல், தங்கபாண்டி விழா ஏற்பாடுகள் செய்தனர்.