ஸ்ரீவில்லிபுத்துார் வைத்தியநாத சுவாமி கோயிலில் மார்கழி அஷ்டமி உற்ஸவம்
ADDED :1 hours ago
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோயிலில் இறைவன் அனைத்து உயிரினங்களுக்கும் படியளுக்கும் திருவிளையாடலை உணர்த்தும் மார்கழி அஷ்டமி உற்ஸவம் நடந்தது. இதனை முன்னிட்டு நேற்று காலை 6:00 மணிக்கு வைத்தியநாதர், சிவகாமி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பின் வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி, அம்மன் வீதி உலா நடந்தது. அப்போது பக்தர்கள் வீதிகளில் பச்சரிசியை தூவி சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம், அர்ச்சர்கள் செய்திருந்தனர்.