எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் ஆண்டாள் ஊஞ்சல் சேவை
ADDED :1 days ago
பரமக்குடி: பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் கூடாரவல்லி விழாவையொட்டி ஊஞ்சல் சேவையில் பெருமாள், ஆண்டாள் அருள் பாலித்தனர். பெருந்தேவி தாயார், வரதராஜ பெருமாள் கோயிலில் மார்கழி மாத உற்சவம் நடக்கிறது. நேற்று முன் தினம் காலை கூடாரவல்லி விழாவில் ஆண்டாள் சேர்க்கையாகி மாலை மாற்றல் வைபவம் நடந்தது. மாலையில் ஆண்டாள், பெருமாள் சேர்க்கையாகி ஊஞ்சல் சேவையில் அருள் பாலித்தனர். திருப்பாவை கோஷ்டியினர், பக்தர்கள் திரளாக தரிசனம் செய்தனர். நாளை மாலை ஆண்டாள் விடையாற்றும் உற்சவம் நடக்கிறது.