உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாரதிபுரம் ஐயப்பன் கோவிலில் மகர ஜோதி தரிசனம்

பாரதிபுரம் ஐயப்பன் கோவிலில் மகர ஜோதி தரிசனம்

புதுச்சேரி: புதுச்சேரி, பாரதிபுரம் ஐயப்பன் கோவிலில் மகர ஜோதி தரிசனம் வெகு விமர்சையாக நடைபெற்றது. அதனையொட்டி, நேற்று காலை கணபதி ஹோமத்தை தொடர்ந்து மூலவருக்கு கலச அபிேஷகம், சந்தன அபிேஷகம் மற்றும் நெய் அபிேஷகம் நடந்தது. பின்னர் சிறப்பு பூஜை நடைபெற்றது.


மாலை மணக்குள விநாயகர் கோவிலில் இருந்து திருவாபரண பெட்டி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக பாரதிபுரம் ஐயப்பன் சுவாமி கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. பின், திருவாபரணங்கள் சுவாமிக்கு சாத்தப்பட்டு, திருவாபரண தரிசனம் மற்றும் மகர ஜோதி மகா தீபாராதனை நடந்தது.


பூஜையில், முதல்வர் ரங்கசாமி, நேரு எம்.எல்.ஏ., மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பூஜை ஏற்பாடுகளை புதுச்சேரி ஐயப்ப சேவா சங்கத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !