உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோயில்களில் பொங்கல் பூஜை; பக்தர்கள் சிறப்பு வழிபாடு

கோயில்களில் பொங்கல் பூஜை; பக்தர்கள் சிறப்பு வழிபாடு

வடமதுரை; வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயிலில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தன. ராஜ அலங்காரத்தில் சுவாமி புறப்பட்டு கேடயத்தில் நான்கு ரத வீதிகள் வழியே நகர் வலம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் குடும்பம், குடும்பமாக கோயிலுக்கு வந்து தரிசனம் செய்தனர். தென்னம்பட்டி சவடம்மன், நந்தீஸ்வரன் கோயிலிலும் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. தலைக்கட்டுதாரர்கள் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடுகளை நடத்தினர். அய்யலுார் வண்டிகருப்பணசுவாமி கோயிலிலும், வடமதுரை நகர் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில் அமைந்துள்ள குல தெய்வ கோயில்களுக்கும் அதிகளவில் மக்கள் சென்று பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !