பகவத்கீதை கூட்டு பாராயணம் 5,000 மாணவர்கள் பங்கேற்பு
புதுச்சேரி: சின்மய இயக்கம் சார்பில் புதுச்சேரியில் நடந்த பகவத்கீதை கூட்டு பாராயணத்தில் 5,000 பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
சின்மயா மிஷன், தனது 75ம் ஆண்டு விழாவை ‘சின்மய அம்ரித் மகோத்ஸ்வம்’ என கொண்டாடுகிறது. அதன் ஒருபகுதியாக உலகளாவிய அளவில் பகவத் கீதை 15ம் அத்தியாயத்தை ஒரே நேரத்தில் கூட்டு பாராயணம் செய்யும் முயற்சி உலகம் முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி நேற்று புதுச்சேரி, லாஸ்பேட்டையில் உள்ள விவேகானந்தா வித்யாலயா பள்ளி, கருவடிக்குப்பம் சங்கரவித்யாலயா, எம்.ஜி.ரோடு சங்கர வித்யாலயா, மூலக்குளம் அம்ரிதா வித்யாலயா ஆகிய பள்ளிகளில் இந்த கூட்டு பாராயண நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், 5,000 மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் கோவை சின்மய மிஷன் சுவாமி சம்ரதிஷ்டானந்தா, புதுச்சேரி யுவராஜ் ஆகியோர், இந்த உலகளாவிய முயற்சியின் நோக்கம், சுவாமி சின்யானந்தரின் வாழ்க்கை மற்றும் பணிகள் குறித்து விளக்கினர். நிகழ்ச்சியை சின்மய மிஷனின் உறுப்பினர் ரவி ஒருங்கிணைத்தார்.