உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செஞ்சி ஏகாம்பர ஈஸ்வரர் கோவில் ராஜகோபுரம் மகா கும்பாபிஷேகம்

செஞ்சி ஏகாம்பர ஈஸ்வரர் கோவில் ராஜகோபுரம் மகா கும்பாபிஷேகம்

செஞ்சி: செஞ்சி பவதாரிணி நகர் ஏகாம்பர ஈஸ்வரர் கோவில் ராஜகோபுரம் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.


விழுப்புரம் மாவட்டம், செஞ்சி சிறுகடம்பூர், அன்னை ஓம் பவதாரிணி நகர், சித்தாஸ்ரமத்தில் காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பர ஈஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு, புதிதாக ஐந்து நிலை ராஜகோபுரம் கட்டி உள்ளனர். இதற்கான மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.


இதை முன்னிட்டு 27ம் தேதி மாலை 5:00 மணிக்கு தேவதா அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, யஜமானி சங்கல்பம், மஹா கணபதி ஹோமம் மற்றும் பூர்வாங்க பூஜையும், 6:30 மணிக்கு முதல் கால பூஜையும், 8:30 மணிக்கு மஹாபூர்ணாஹூதியும் நடந்தது.


நேற்று காலை 7:00 மணிக்கு அன்னை ஓம் பவதாரிணி தலைமையில் மகா கணபதி வழிபாடு, இரண்டாம் கால பூஜை, 9:30 மணிக்கு மகா பூர்ணாஹூதியும்், கடம் புறப்பாடும் 9:45 மணிக்கு ராஜகோபுரம் மகா கும்பாபிஷேகம் நடந்தது.


இதில் முன்னாள் அமைச்சர் மஸ்தான் எம்.எல்.ஏ., சென்னை எம்.வி., மோகன்லால் டயாபட்டிக் சென்டர் நீரிழிவு சிகிச்சை நிபுணர் டாக்டர் வரலட்சுமி, முன்னாள் சேர்மன் ரங்கநாதன், தொழிலதிபர் கோபிநாத், ராஜாதேசிங்கு கல்வி குழும தாளாளர் பாபு, அ.தி.மு.க., மாவட்ட அவைத் தலைவர் கண்ணன், சாரதா மெட்ரிக் மேல்நிலை பள்ளி தாளாளர் கலைச்செல்வன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


ஒருங்கிணைப்பாளர்கள் வந்தியத்தேவன், ஸ்வேத பத்மாசனி மெட்ரிக் மேல்நிலை பள்ளி தாளாளர் உமா ஜெயராமன், பேராசிரியர் மகேஸ்வரி ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்தனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !