உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பள்ளிகொண்டீஸ்வரர் கோவிலில் புதிய தேருக்கு கும்பாபிஷேகம்

பள்ளிகொண்டீஸ்வரர் கோவிலில் புதிய தேருக்கு கும்பாபிஷேகம்

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அடுத்த சுருட்டப்பள்ளி கிராமத்தில் சர்வ மங்களா சமேத பள்ளிகொண்டீஸ்வர சுவாமி கோவில் உள்ளது.


பழமை வாய்ந்த இக்கோவிலில், சிவபெருமான் உலகை காக்க, ஆலகால விஷத்தை உண்ட மயக்கத்தில், அன்னை பார்வதி தேவி மடியில் தலைவைத்து துாங்கும் கோலத்தில் காட்சியளிக்கிறார். இக்கோவிலுக்கு, காளஹஸ்தியைச் சேர்ந்த பக்தர் ஒருவர், 25 லட்சம் ரூபாய் செலவில் தேர் வழங்கினார்.


இதற்கான கும்பாபிஷேக விழா நேற்று காலை 10:00 மணிக்கு நடந்தது. பின், தேர் கோவிலை வலம் வந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !