சுயம்பு காளியம்மன் கோவிலில் 8ல் ஸ்ரீ குபேர கணபதி ஹோமம்
ADDED :1 hours ago
ஹலசூரு: பெங்களூரு ஹலசூரு சுயம்பு காளியம்மன் கோவிலில், வரும் 8 ம் தேதி காலை 9:00 மணி முதல் 11:30 மணி வரை ஸ்ரீ குபேர கணபதி ஹோமம் நடக்கிறது. அதனை தொடர்ந்து, மதியம் 12:00 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
இந்த ஹோமத்தில் பங்கேற்பர்களுக்கு படிப்பில் தடை, ஞாபக மறதி, பாடங்ளில் ஆர்வமின்மை ஆகியவை நீங்கும். மேலும் மாணவ – மாணவியரின் தவறான சவகாச தோஷம், தீராத நோய்களும் நீங்கும்.
இந்த ஹோமத்தில் பங்கேற்று குபேர கணபதியின் அருளை பெற, கோவில் நிர்வாகத்தினர் பார்த்திபன், சந்தானம் கேட்டு கொண்டுள்ளனர்.