காஞ்சிபுரம் பொன்னியம்மன் கோவிலில் ஊரணி பொங்கல் விழா
ADDED :241 days ago
காஞ்சிபுரம்: பொன்னியம்மன் கோவிலில், ஊரணி பொங்கல் விழா நேற்று விமரிசையாக நடந்தது.
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஒன்றியம், திருமால்பூர் கிராமத்தில், பொன்னியம்மன் கோவில் உள்ளது. இங்கு, மழை வேண்டி நீர் நிலைகளில், ஆண்டுதோறும் ஊரணி பொங்கலிடும் நிகழ்ச்சி நடைபெறும். நடப்பாண்டு ஊரணி பொங்கலிடும் நிகழ்ச்சி நேற்று அதிகாலை, 5:30 மணிக்கு பொன்னியம்மனுக்கு சிறப்பு அபிஷேகத்துடன் துவங்கியது. காலை, 7:30 மணிக்கு ஊரணி பொங்கலிடும் நிகழ்ச்சி மற்றும் மூலவர் பொன்னியம்மன் அலங்காரம் நடந்தது. மாலை, 6:00 மணி அளவில், மலர் அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.