உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகா சிவராத்திரி விழா: ராமேஸ்வரத்தில் சுவாமி, அம்மன் முத்தங்கி சேவை

மகா சிவராத்திரி விழா: ராமேஸ்வரத்தில் சுவாமி, அம்மன் முத்தங்கி சேவை

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலில் 7ம் நாள் சிவராத்திரி விழா யொட்டி ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் முத்தங்கி சேவையில் வீதி உலா வந்தனர்.


ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் மாசி மகாசிவராத்திரி விழா பிப்.,8ல் கொடி ஏற்றத்துடன் துவங்கியது. 7ம் நாள் விழாவான நேற்று கோயிலில் இருந்து தங்க பல்லாக்கில் சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன், பிரியாவிடை அம்மன் எழுத்தருளி முத்தங்கி சேவையில் கோயில் நான்கு ரதவீதியில் உலா வந்தனர்.


அப்போது வீதியெங்கும் கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 8ம் நாள் திருவிழாவான இன்று (பிப்.15) மகா சிவராத்திரி விழா யொட்டி பகல், இரவு முழுவதும் கோயில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடக்கும். நாளை (பிப்., 16ல்) மாசி திருத்தேர் வீதி உலா, பிப்.,17ல் மாசி அமாவாசை யொட்டி அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடுவார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !