உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் சிவராத்திரி பூஜை

திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் சிவராத்திரி பூஜை

கடலுார்: பாடலீஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி சிறப்பு பூஜை நடந்தது.


கடலுார் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நேற்று காலை சோமாஸ்கந்தர், சந்திரசேகர், அருந்தவநாயகி உள்ளிட்ட சுவாமிகளுக்கு அபிஷேகம் நடந்தது. பகல்12:00 மணிக்கு உச்சிகால பூஜை நடந்தது. இரவு 8:30 மணி முதல், 2:00 மணி வரை நான்கு காலமும் சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. மூலவர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மாணவிகள் பரதநாட்டியம் ஆடினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !