காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் பிரம்மோத்சவம் துவக்கம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் மாசி பிரம்மோத்சவ விழா, இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.
காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், நடப்பாண்டிற்கான பிரம்மோத்சவம் இன்று காலை 5:15 மணிக்கு, காஞ்சி இளைய மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில், கொடிமரத்திற்கு பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டு, காமாட்சியம்மன் படம் இடம்பெற்ற கொடியை ஏற்றினர். அதன்பின், வெள்ளி விருஷப வாகனத்தில் எழுந்தருளிய காமாட்சியம்மன், நான்கு ராஜ வீதிகளிலும் உலா வந்தார். இரவு தங்க மான் வாகன உத்சவம் நடந்தது. நாளை காலை மகரத்திலும், இரவு சந்திர பிரபையிலும், நாளை காலை தங்க சிம்ம வாகனத்திலும், இரவு யானை வாகனத்திலும் காமாட்சியம்மன் உலா வருகிறார். இதில், ஒன்பதாம் நாள், பிரபல உத்சவமான வெள்ளி ரதம், மார்ச் 1ம் தேதி இரவு விமரிசையாக நடக்கிறது. காமாட்சியம்மன் கோவில் கொடியேற்றம் கூடுதல் படம் சார்.. காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவில் மாசி பிரம்மோத்சவத்தின் முதல் நாளான நேற்று காலை லட்சுமி, சரஸ்வதி தேவியருடன் காமாட்சியம்மன் விருஷப வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தார்.