ஸ்ரீராதா கிருஷ்ண திருக்கல்யாணம்
ADDED :1 days ago
திருப்பூர்: திருப்பூர், ஓடக்காடு, ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடம் திருப்பூர் கிளை, ஸ்ரீராமகிருஷ்ணபஜனை மடத்தில், ஸ்ரீராதாகிருஷ்ண கல்யாண உற்சவம் நேற்று துவங்கியது. காலை, 9:00 மணிக்கு, தோடயமங்களம் குரு கீர்த்தனை, அஷ்டபதி பூஜைகள் நடந்தன.
இரவு, 8:00 மணிக்கு, கணேசர் கீர்த்தனைகள், திவ்ய நாம பஜனை போலத்ஸ்வம் நடந்தது. இன்று, உஞ்சவிருத்தி, கல்யாண உற்சவம், மகாதீபாராதனை நடைபெற உள்ளது.