காணும் பொங்கலன்று பரிவேட்டை திருவிழா
ADDED :4687 days ago
பேரம்பாக்கம்: பேரம்பாக்கத்தில், வரும் 16ம் தேதி காணும் பொங்கல் அன்று, பரிவேட்டை திருவிழா நடைபெறுகிறது. இத்திருவிழாவில் பேரம்பாக்கம் பாலமுருகன், காசிவிஸ்வநாதர், சோளீஸ்வரர், களாம்பாக்கம் திருநாகேஸ்வரர், நரசிங்கபுரம் திருமுருகன், லட்சுமி நரசிம்ம பெருமாள், மாரியம்மன், சிவபுரம் செல்வ விநாயகர், மாரிமங்கலம் வள்ளலார், மாரியம்மன் என, 10 உற்சவர்கள் வண்ண மலர்கள் மற்றும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, மைதானத்தில் ஒரே இடத்தில் கூடி பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளனர். இவ்விழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள் என, எதிர்பார்க்கப்படுகிறது.