உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ரூ. 1.26 கோடி உண்டியல் காணிக்கை

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ரூ. 1.26 கோடி உண்டியல் காணிக்கை

ராமேஸ்வரம்;  ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.1.26 கோடி வருவாயாக கிடைத்தது. ராமேஸ்வரம் கோயிலில் 30 நாட்களுக்குப் பின் நேற்று சுவாமி, அம்மன் மற்றும் பஞ்சமூர்த்திகள் சன்னதிகள் முன்புள்ள உண்டியலை கோயில் இணை ஆணையர் செல்லதுரை முன்னிலையில் திறக்கப்பட்டு காணிக்கைகளை ஊழியர்கள் சேகரித்தனர். இதனை கோயில் கல்யாண மண்டபத்தில் ஊழியர்கள் எண்ணினார்கள். இதில் ரொக்க பணம் ரூ. 1 கோடியே 26 லட்சத்து 48 ஆயிரத்து 998 ரூபாயும், தங்கம் 20 கிராம், வெள்ளி 4 கிலோ 800 கிராம் காணிக்கையாக கிடைத்தது. காணிக்கை எண்ணும் பணியில் கோயில் உதவி ஆணையர் ரவீந்திரன், பேஸ்கார்கள் கமலநாதன், பஞ்சமூர்த்தி, ஆய்வாளர் சிவக்குமார், ஊழியர்கள் பலர் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !