/
கோயில்கள் செய்திகள் / சிவகிரிபட்டி அக்னி வீரபுத்திரன், பேச்சியம்மன், கோட்டை கருப்புசாமி கோயிலில் கும்பாபிஷேகம்
சிவகிரிபட்டி அக்னி வீரபுத்திரன், பேச்சியம்மன், கோட்டை கருப்புசாமி கோயிலில் கும்பாபிஷேகம்
ADDED :8 days ago
பழநி: பழநி சிவகிரிபட்டி அக்னி வீரபுத்திரன், பேச்சியம்மன், கோட்டை கருப்புசாமி கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
பழநி சிவகிரிபட்டியில் அக்னி வீரபத்திரன், பேச்சியம்மன், கோட்டை கருப்புசாமி கோயில் உள்ளது. இங்கு கும்பாபிேஷகம் செய்ய சன்னதி கோபுரங்கள் புதுப்பிக்கப்பட்டு கலசம் நிர்மானிக்கப்பட்டது. நேற்று முன்தினம் மாலை கணபதி ஹோமத்துடன் முதல் கால பூஜை துவங்கியது. நேற்று காலை இரண்டாம் கால பூஜை நடந்ததும் கணபதி, அக்னி வீரபுத்திரன், பேச்சியம்மன், கோட்டை கருப்புசாமி சன்னதிகளின் விமான கலசங்களுக்கு கும்பாபிஷேகம் செய்து தீபாராதனை நடந்தது. பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது.