உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்

திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்

கடலுார்: கடலுார் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது.


கடலுார் திருப்பாதிரிப்புலியூர் பெரியநாயகி உடனுறை பாடலீஸ்வர் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 18ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. நவக்கிரக ஹோமம், நட்சத்திர ஹோமம், மகாலட்சுமி ஹோமம், கோ பூஜை, தன பூஜை, வாஸ்து சாந்தி பூஜைகளை தொடர்ந்து நேற்று முன்தினம் யாகசாலை பூஜைகள் துவங்கியது. யாகசாலை பூஜைக்காக 55 குண்டங்கள், 23 கலச மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. 101 சிவாச்சாரியார்கள், 37 ஓதுவார் மூர்த்திகள், 21 வேத விற்பன்னர்கள் பூஜைகளை நடத்துகின்றனர். விநாயகர், 63 நாயன்மா ர்கள், துர்க்கை, தட்சிணாமூர்த்தி என 163 சுவாமி சிலைகளுக்கு 8 வகை மூலிகைகளை கலந்து சாற்றக்கூடிய அஷ்டபந்தனம் இடிக்கும் பணி இரண் டு நாட்களாக நடந்தன. நேற்றுமுன்தினம் காலை பிரசன்னாபிஷேகம், பரிவார கலாகர்ஷணம், மாலை கும்பாலங்காரம், சுவாமி, அம்பாள் கலாகர்ஷணம், யாத்ரா ேஹாமம், யாத்ராதானம், முதல் கால யாக சாலை பூஜை நடந்தது.


நேற்று காலை விசேஷ சந்தி, கணபதி பூஜை, இரண்டாம் கால யாக சாலை பூஜை, மாலையில் புண்யாவாசனம், மூன்றாம் கால யாக சாலை பூஜை நடந்தது. இன்று 24ம் தேதி காலை 7:30 மணி முதல், 12:00 மணி வரை அங்குரார்ப்பணம், நான்காம் கால யாக சாலை பூஜை, மாலை 5:00 மணி முதல், 9:00 மணி வரை சதுர்த்வார பூஜை, ஐந்தாம் கால யாக சாலை பூஜை நடக்கிறது. நாளை 25ம் தேதி காலை 4:00 மணிக்கு 6ம் கால யாக சாலை பூஜை, 6:00 மணிக்கு பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம், 8:00 மணிக்கு நாடி சந்தானம், 9:30 மணிக்கு யாத்ராதானம், கடம் புறப்பாடு, 10:30 மணிக்கு விமானம் மற்றும் ராஜகோபுரங்களுக்கு கும்பாபிஷேகம், அதனைத் தொடர்ந்து, மூலவர் பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மனுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !