உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மயிலாடுதுறை அருகே ஒரே நேரத்தில் 640 பசு மாடுகளுக்கு கோபூஜை!

மயிலாடுதுறை அருகே ஒரே நேரத்தில் 640 பசு மாடுகளுக்கு கோபூஜை!

மயிலாடுதுறை: நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள வாணாதிராஜபுரம் கிராமத்தில் ஸ்ரீ ஜெயம் பசு காப்பகம் உள்ளது. பசுவதையை தடுக்க ஆரம்பிக்கப்பட் ட இந்த காப்பகத்தில் அடிமாட்டுகளாக விற்கப்பட்ட மாடுகளை வாங்கி வளர்த்து வருகின்றனர். தற்போது இங்கு 640 பசுமாடுகள் வளர்க்கப்படுகின்றது. பசு மாடுகளின் உடலில் லெட்சுமி உள்ளிட்ட தெய்வங்கள் குடிகொண்டுள்ளதால் பசுவுக்கு செய்யப்படும் கோபூஜை என்பது ஒரே நேரத்தில் அனைத்து தெய்வங்களுக்கும் பூஜை செய்வதாக உள்ளது. கோபூஜை செய்தால் சகல ஐஸ்வர்யங்களையும் பெறுவர் என்பது ஐதீகம். மாட்டு பொங்களை முன்னிட்டு நேற்று ஸ்ரீ ஜெயம் பசு காப்பகத்தில் உலக நண்மை வேண்டி கோபூஜை மற்றும் இந்திர பூஜை நடத்தப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு பசுக்களுக்கு மாலை அணிவித்து கோபூஜை செய்து உணவுகளை வழங்கி வனங்கினர். இந்த பூஜையில் காப்பகத்தின் டிரஸ்டிகளான குருசாமி, ராமமூர்த்தி மற்றும் முன்னாள் எம்.எல்.எ. குத்தாலம் அன்பழகன் உள்ள உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !