ஈஸ்டர் திருநாள் சிறப்பு திருப்பலி: மெழுகுவர்த்தி ஏந்தி வழிபாடு
சிவகங்கை: சிவகங்கை அலங்கார அன்னை மற்றும் வல்லனி அன்னை தெரசா சர்ச்சில் ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு பக்தர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி, சிறப்பு திருப்பலி நடத்தினர்.
இயேசு உயிர்த்தெழுந்த நாளை ஈஸ்டர் திருநாளாக கிறிஸ்தவர்கள் கடைபிடித்து வருகின்றனர். நேற்று இரவு ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு சிவகங்கை அலங்கார அன்னை சர்ச்சில் சிவகங்கை மறைமாவட்ட பிஷப் லுார்து ஆனந்தம் தலைமையில் கிறிஸ்தவர்கள் கையில் மெழுகுவர்த்தியை ஏந்தி, சிறப்பு திருப்பலி நடத்தினர். வட்டார அதிபர் ஜெபமாலை சுரேஷ், உதவி பாதிரியார் ஸ்டீபன் உட்பட அலங்கார அன்னை சர்ச் பங்கை சேர்ந்த அனைத்து கிறிஸ்தவர்களும் ஈஸ்டர் திருநாள் சிறப்பு திருப்பலியில் பங்கேற்னர். சிவகங்கை அருகே வல்லனி அன்னை தெரசா சர்ச்சில் பாதிரியார் பிலிப் தலைமையில் பாதிரியார்கள் சிறப்பு திருப்பலி நடத்தினர். இந்த சர்ச் பங்கை சேர்ந்த கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் திருநாளில் மெழுகுவர்த்தி ஏந்தி சிறப்பு திருப்பலியில் பங்கேற்றனர்.