உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகா பைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி விழா

மகா பைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி விழா

அன்னூர்: மகா பைரவர் கோவிலில், தேய்பிறை அஷ்டமி விழா நடைபெற்றது.


மொண்டிபாளையம் அருகே திம்மநாயக்கன்புதூரில் உள்ள மகா பைரவர் கோவிலில், ஒவ்வொரு மாதமும், தேய்பிறை அஷ்டமியன்று சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. நேற்று இரவு 7:30 மணிக்கு வேள்வி பூஜை நடந்தது. இதையடுத்து கோ பூஜை, அஸ்வ பூஜை நடந்தது. இரவு 8:30 மணிக்கு, மகா பைரவருக்கு, நவ அபிஷேகம், கலச தீர்த்தம், சிறப்பு வழிபாடு, அன்னாபிஷேகம் நடந்தது. அன்னதானம் வழங்கபட்டது. சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !