திருப்பூர் கோட்டை மாரியம்மன் கோவிலில் தமிழ் புத்தாண்டு சிறப்பு வழிபாடு
ADDED :1 days ago
திருப்பூர் : தமிழ் புத்தாண்டையொட்டி திருப்பூரில் உள்ள கோட்டை மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் திரண்டனர்; அம்மன் ரூபாய் நோட்டுகள் மற்றும் பழங்களால் அலங்கரிக்கப்பட்டார்.
திருப்பூர் கோட்டை மாரியம்மன் கோவிலில் தமிழ்ப்புத்தாண்டு , சித்திரை முதல் நாளான இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அம்மனுக்கு ரூபாய் நோட்டு மற்றும் கனிகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.