உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் பால்குடம் எடுத்து பக்தர்கள் வழிபாடு

திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் பால்குடம் எடுத்து பக்தர்கள் வழிபாடு

திருப்புத்தூர்: திருப்புத்தூரில் தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு திருத்தளிநாதர் கோயில் முருகனுக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபட்டனர்.


திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் ஏப்.7 ல் சஷ்டியை முன்னிட்டு சுப்பிரமணியர் சன்னதியில் அபிேஷக,ஆராதனைகள் நடந்து சித்திரை பால்குடம் எடுக்க பக்தர்கள் விரதம் துவங்கினர். நேற்று காலை 7:00 மணிக்கு கோட்டைக்கருப்பண்ண சுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக திருத்தளிநாதர் கோயில் வந்தனர். தொடர்ந்து சுப்பிரமணியருக்கு பாலாபிஷேகம் நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது.  






தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !