திருநள்ளாறு கோவில் தமிழ் வருடப்பிறப்பு பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி
காரைக்கால்: காரைக்கால் திருநள்ளாறு ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலில் பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
புதுச்சேரி மாநில காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலில் தனிச்சன்னதியில் ஸ்ரீ சனிஸ்வர பகவான் அனுகிரக மூர்த்தியாக அருள் பாலித்து வருகிறார். இதனால் நாட்டில் பல்வேறு பகுதியிலிருந்து பல்லாயிரக்காணக்கான பக்தர்கள் பகவானை தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று தமிழ் வருடப்பிறப்பை முன்னிட்டு வாக்கிய பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கோவில் நிர்வாகம் சார்பில் சிவாச்சாரியார்கள் பஞ்சாங்கள் வாசிக்கும் போது ஒருத்தரப்பினர் பஞ்சாங்கம் வாசிக்ககூடாது என்று தகராறு செய்தனர்.அப்போது தருமபுரம் ஆதீன கட்டளை விசாரணை ஸ்ரீமத் சட்டநாத தம்பிரான் சுவாமிகள் மற்றும் எதிர்தரப்பினர் இடையோ வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் தகவல் அறிந்த திருநள்ளாறு இன்ஸ்பெக்டர் பிரவின்குமார் சம்பவ இடத்திற்கு வந்து இருத்தரப்பினர்களை சமாதனம் செய்தார்.இதனால் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டது. பின்னர் வழக்கம் போல் பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது.இதில் திருநள்ளாறு கோவிலில் வைகாசி விசாக பிரம்மோற்சவம் நிகழ்ச்சி வரும் மே.13ம் தேதி கொடியேற்ற நிகழ்ச்சி மற்றும் மே.27ம் தேதி தேர்திருவிழா நடைபெறுவதாக சிவாச்சாரியார் பஞ்சாங்கம் வாசித்தார்.இந்நிகழ்ச்சியில் தருமபுர ஆதீன கட்டளை விசாரணை ஸ்ரீமத் சட்டநாத தம்பிரான் சுவாமிகள் கோயில் நிர்வாக அதிகாரி சுப்ரமணியன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.