உறுதியாக இருக்க என்ன வழி: பாரதியார்
* இடையூறு வந்தாலும் குறிக்கோளை அடைவதில் உறுதியாக இரு.
* வீட்டு வழிபாட்டால் குடும்பமும், கோயில் வழிபாட்டால் ஊரும் செழிக்கும்.
* வாக்கு கொடுப்பது எளிது. ஆனால் நிறைவேற்றுவது கடினம்.
* தீமை எனத் தெரிந்த பின்னும், நல்வழியில் செல்லாமல் இருப்பது அறிவீனம்.
* அன்பால் பகை அழியும். இன்பம் உண்டாகும்.
* எல்லா உயிர்களையும் நேசி. மனதில் அமைதி இருக்கும்.
* பயம், சந்தேகம், சோம்பல் ஒழிந்தால் நல்ல காலம் பிறக்கும்.
* கடவுளை சரணடைந்தால் வலிமை, அழகு, மகிழ்ச்சி உண்டாகும்.
* தியானத்தின் மூலம் விரும்பியதை அடைய முடியும்.
* மனதில் எப்போதும் நல்ல எண்ணம் வளர வேண்டும்.
* காலத்தை வீணாக்கினால் அதற்குரிய பலன் கிடைக்காது.
* பேச்சு, செயலில் முரண்படும் மனிதரிடம் உறவாடாதே.
* எங்கும், எப்போதும், எதிலும் நேர்மையைப் பின்பற்று.
* உண்மையை பேசு. அது உன்னை பாதுகாக்கும்.
* பிறரை ஏமாற்றாதே; அதைப் போல் நீயும் ஏமாறாதே.
* தன்னுள் உலகத்தையும், உலகத்திடம் தன்னையும் காண்பவன் ஞானி.