வெற்றிக்கான ரகசியம்: ஸ்ரீஅன்னை
* அதிகம் பேசாதே. செயலில் ஈடுபடு. இதுவே வெற்றிக்கான ரகசியம்.
* பிறரது கண்ணோட்டத்தில் பிரச்னையை அணுகு. ஆணவம் நீங்கும்.
* ஆழ்ந்த நம்பிக்கையே நோயாளிக்குத் தேவையான மருந்து.
* எந்தளவுக்கு கடவுளை அறிகிறோமோ, அந்தளவுக்கு துன்பம் மறையும்.
* உண்மை அற்றவர்களை சந்தித்தால் மனம் சோர்வடையும்.
* தீய பழக்கத்தை விடுவது எளிதல்ல. தளராத உறுதியுடன் எதிர் கொள்.
* அனைத்தையும் தனக்கென வைப்பது பக்தியல்ல; தன்னையே அர்ப்பணிப்பது பக்தி.
* குழந்தைகளுக்கு நினைவாற்றலை விட புரிந்து கொள்ளும் திறனே முக்கியம்.
* வெற்றி பெற நினைத்தால் மனதை ஒருமுகப்படுத்துவது அவசியம்.
* தொண்டு செய்வது என்பது கடவுளை வணங்குவதற்கு சமம்.
* மேகத்தை கலைக்கும் சூரியன் போல, பிரச்னைகளை ஒரு புன்சிரிப்பு கலைத்து விடும்.
* பிறர் விஷயங்களில் தேவையின்றி தலையிடாதே.
* நம்பிக்கையுடன் கடவுளிடம் பிரார்த்தனை செய். கேட்டது கிடைக்கும்.
* அறிவு வளர வளர அறியாமையின் இயல்பை புரிந்து கொள்வாய்.
* ஆன்மிகத்தில் முன்னேற விரும்பினால் போராட தயாராக இரு.