கம்பிளியம்பட்டி வரசித்தி வாராஹி அம்மன் கோவிலில் அமாவாசை பூஜை
ADDED :173 days ago
சாணார்பட்டி: சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராஹி அம்மன் கோவிலில் மழை வேண்டி நடந்த அமாவாசை யாக பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி அம்மனுக்கு 16 வகை அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து மழை வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டிய அமாவாசை யாக பூஜை நடந்தது. யாகத்தை கோவில் நிர்வாகி சஞ்சீவி சாமிகள் நடத்தி வைத்தார். தேங்காயில் தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர். சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.