உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் /  தமிழ் வருட பஞ்சாங்கம் கவர்னர் வெளியீடு

 தமிழ் வருட பஞ்சாங்கம் கவர்னர் வெளியீடு

 காரைக்கால்: அகில இந்திய ஆதிசைவ சிவாச்சார்யார்கள் சேவா சங்கம் சார்பில், தமிழ் வருட பஞ்சாங்கத்தை கவர்னர் கைலாஷ்நாதன் வெளியிட்டார்.


காரைக்கால் மாவட்ட அகில இந்திய ஆதிசைவ சிவாச்சார்யார்கள் சேவா சங்கம் சார்பில், பராபவ தமிழ் வருட பஞ்சாங்கம் வெளியிடும் நிகழ்ச்சி நேற்று புதுச்சேரி லோக் நிவாஸில்  நடந்தது. முதல் பிரதியை கவர்னர் கைலாஷ் நாதன் வெளியிட, அதனை அகில இந்திய தலைவர் புதுச்சேரி மாநிலத் அமைப்புச் செயலர் திருநள்ளாறு சிவ ராஜா சுவாமிநாத சிவாச்சார்யார் பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் புதுச்சேரி மாநில தலைவர் பாலசுப்ரமணிய சிவாச்சார்யார், துணைத் தலைவர் சிவராம சிவாச்சார்யார் மற்றும் சங்கப் பொறுப்பாளர்கள் உடனிருந்து வேத ஆகம மங்கள ஆசிர்வாதத்துடன் பிரசாதம் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !