உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவப் பெருமாள் கோயில் ராமானுஜர் அவதார உற்சவம் தேரோட்டம்

ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவப் பெருமாள் கோயில் ராமானுஜர் அவதார உற்சவம் தேரோட்டம்

ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் ராமானுஜர் அவதார உற்சவ  தேரோட்டம் இன்று சிறப்பாக நடைபெற்றது.


ஸ்ரீபெரும்புதுாரில் ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவில் உள்ளது. இக் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் ராமானுஜர் அவதார உற்சவம் மற்றும் பிரம்மோற்சவ திருவிழா கோலாகலமாக நடைப்பெறும். அதன்படி, ராமானுஜரின் 1009வது அவதார உற்வசம், இம்மாதம் 13ம் தேதி துவங்கியது. தொடர்ந்து, தங்கப்பல்லாக்கு, யாளி வாகனம், மங்களகிரி, சிம்ம வாகனம், ஹம்ச வாகனம், குதிரை வாகனம், சூர்யபிரபை உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி, வீதியுலா வந்து ராமானுஜர் அருள்பாலித்தார். எட்டம் நாளான நேற்று, சேஷ வாகன வீதியுலா புறப்பாடு நடந்தது. இதையடுத்து, இன்று ராமானுஜர் தேர் திருவிழா நடைபெற்றது. முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் ராமானுஜர் தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் வடம் பிடிக்க தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. அடுத்த பத்துநாட்கள் ஆதிகேசவப் பெருமாள் உற்சவம் நடக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !