பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் கோவிலில் தேர் திருவிழா துவங்கியது
ADDED :1 days ago
பெண்ணாடம்: பெண்ணாடம் அழகிய காதலி அம்மன் உடனுறை பிரளயகாலேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
பெண்ணாடம் அழகிய காதலி அம்மன் உடனுறை பிரளயகாலேஸ்வரர் கோவில் சித்திரை தேர் பெருவிழாவை முன்னிட்டு நேற்று காலை 10:00 மணிக்கு மூலவர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிேஷகம், 10:30 மணிக்கு கோ பூஜை நடந்தது. 11:00 மணிக்கு கொடியேற்றம் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் சு வாமி தரிசனம் செய்தனர். இன்று (22ம் தேதி) சூரிய பிறை - சந்திர பிறை, 5ம் தேதி அப்பருக்கு சூலப, இடப முத்திரையிடுதல், 27ம் தேதி சமணரை கழுவிலேற்றல், பிச்சாண்டவர் உற்சவம், முக்கிய நிகழ்வான வரும் 29ம் தேதி காலை 6:00 மணிக்கு தேர் வடம் பிடித்தல் நடக்கிறது. 30ம் தேதி தீர்த்தவாரி, 1ம் தேதி கொடியிறக்கம், 2ம் தேதி வசந்த உற்சவத்துடன் சித்திரை பெருவிழா நிறைவடைகிறது.