புதுப்பாளையம் மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்
ADDED :1 days ago
ராஜபாளையம்: ராஜபாளையம் புதுப்பாளையம் மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். ராஜபாளையம் மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு கோயிலில் நேற்று முன்தினம் காப்பு கட்டப்பட்டு நேற்று கொடி மரத்துக்கு பால், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகமும் அதனை தொடர்ந்து கொடி ஏற்றி மகா தீபாராதனை நடந்தது. விழாக்காலங்களில் அம்மன் தினமும் பொட்டி பல்லாக்கு, கண்ணாடி சப்பரம், பூத, தண்டியல், பூ சப்பரம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடக்கிறது. முக்கிய நிகழ்வான ஏப்.30ல் பூக்குழி திருவிழா நடக்கிறது. ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் வெங்கட்ட ராஜா தலைமையில் விழா குழுவினர் செய்தனர்.