கிருமாம்பாக்கம் ராமானுஜருக்கு சிறப்பு திருமஞ்சனம்
ADDED :171 days ago
பாகூர்: கிருமாம்பாக்கம் ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவிலில், ராமானுஜருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. பாகூர் அடுத்த கிருமாம்பாக்கம் முத்தலாம்மன் கோவில் வளாகத்தில் உள்ள ஸ்ரீநிவாச பெருமாள் கோவிலில், ராமானுஜருக்கு தனி சன்னிதி உள்ளது. இங்கு, ராமானுஜரின் அவதார நட்சத்திரமான திருவாதிரை நட்சத்திரைத்தையொட்டி, நேற்று ராமானுஜருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. இதனையொட்டி, காலை 6:00 மணிக்கு, அவரது சிலைக்கு, பால், தயிர், தேன், சந்தனம் உள்ளிட்டவற்றால் சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை, சந்தோஷ் மற்றும் சதாசிவம் குடும்பத்தினர் செய்திருந்தனர்.