உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவையில் வரகூர்ஸ்ரீ நாராயண தீர்த்தரின் ஸ்ரீ கிருஷ்ண லீலா தரங்கிணி மகோத்சவ நிகழ்ச்சி

கோவையில் வரகூர்ஸ்ரீ நாராயண தீர்த்தரின் ஸ்ரீ கிருஷ்ண லீலா தரங்கிணி மகோத்சவ நிகழ்ச்சி

கோவை: ஆஸ்திக சமாஜம் மற்றும் சாவித்திரி போட்டோ ஹவுஸ் குடும்பத்தினர் இணைந்து வழங்கும் கோவையில் வரகூர்ஸ்ரீ நாராயண தீர்ததரின் ஸ்ரீ கிருஷ்ண லீலா தரங்கிணி மகோத்சவ நிகழ்ச்சி கோவை ராம் நகர் கோதண்டராமர் சுவாமி கோவிலில் மூன்று நாட்கள் நடைபெறுகிறது முதல் நாள் நிகழ்வாக இன்று 24ம் தேதி ஸ்ரீ கிருஷ்ண லீலா தரங்கிணி 1-2-34. தரங்கங்கள் நிகழ்ச்சி நடந்தது இதில் மும்பை ஸ்ரீனிவாச பாகவதர் குழுவினர் இந்த நிகழ்ச்சியை நடத்தினரர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவாக பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது 2-ம் நாள் நிகழ்வாக  சனிக்கிழமை ஸ்ரீ கிருஷ்ண லீலா தரங்கிணி கீதங்கள்  5.6-7 8 ஆகியவற்றை வரகூர் ஸ்ரீநாராயண தீர்த்தர் பஜன் மண்டலி சார்பில் நடைபெறுகிறது மூன்றாம் நாள் நிகழ்வாக ஞாயிற்றுக்கிழமை அன்று 9-10-11-12 வது தரங்கங்கள் நிகழ்ச்சியை சித்தன் வாழூர் திரிவேதி பிரம்ம ஸ்ரீராஜகோபால சாஸ்திரிகள் குழுவினர் நடத்துகின்றனர் இந்த நிகழ்வானது 3 நாட்களும் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் இரவு 9 மணிவரையிலும் நடைபெறும் என்று விழா குழுவினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த நிகழ்ச்சியில் அனைவரும் தவறாத கலந்து கொள்ளுமாறு கோதண்ட ராமர் சுவாமி கோவில் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !