உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாரியம்மன் கோவிலில் கம்பம் திருவிழா உற்சாகம்

மாரியம்மன் கோவிலில் கம்பம் திருவிழா உற்சாகம்

மேட்டுப்பாளையம்: சிறுமுகையில், மகா சக்தி மாரியம்மன் கோவிலில், 25ம் ஆண்டு கம்பம் திருவிழா துவங்கியது.


சிறுமுகையில் சக்தி பிரதான சாலையில், பேங்க் ஸ்டாப் அருகே ஸ்ரீ சக்தி விநாயகர் மற்றும் மகா சக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. கோவிலின், 25ம் ஆண்டு கம்பம் திருவிழா கடந்த, 19ம் தேதி கிராம சாந்தியுடன் துவங்கியது. அர்ச்சகர் மகாலிங்கம் சிறப்பு பூஜை செய்தார். 20ம் தேதி பவானி ஆற்றில் இருந்து புனித தீர்த்தம் எடுத்து வந்து கோவிலை சுத்தம் செய்தனர். இரவு பூச்சாட்டும், கம்பம் நடுதலும் நடந்தது. ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்தும், கம்பத்தை சுற்றி, பெரியவர்கள், இளைஞர்கள் சிறுவர்கள் ஆகியோர் ஆடியும் வருகின்றனர்.


வரும் 28ம் தேதி பவானி ஆற்றில் இருந்து சக்தி கரகம் எடுத்து வந்து அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்கின்றனர். 29ம் தேதி அம்மனுக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. காலை 9:00 மணிக்கு திருக்கல்யாண சீர்வரிசை ஊர்வலமாக அழைத்து வருதல் நடக்கிறது. திருக்கல்யாணம் முடிந்தவுடன் பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்படுகிறது. அன்று மாலை மாவிளக்கு முளைப்பாரி எடுத்து வருதல் நடக்கிறது. மாலை, அம்மன் திருவீதி உலா வந்த பின், இரவு கம்பம் அகற்றும் வைபவம், 30ம் தேதி மஞ்சள் நீராட்டு, மறு பூஜை நடக்கின்றன. விழா ஏற்பாடுகளை, கவுரவத் தலைவர்கள் ராமலிங்கம், ரங்கசாமி, தலைவர் ஜெயபிரகாஷ் நாராயணன், செயல் தலைவர் சங்கரப்பன் மற்றும் நிர்வாகிகள், விழா கமிட்டினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !