பரமக்குடி சித்திரை திருவிழா: ராவண, கைலாச, காமதேனு வாகனத்தில் சுவாமி உலா
ADDED :167 days ago
பரமக்குடி: பரமக்குடி ஈஸ்வரன் கோயில் சித்திரை திருவிழாவில் நேற்று சுவாமி, அம்பாள் ராவண கைலாசம் மற்றும் காமதேனு வாகனத்தில் உலா வந்தனர். கோயிலில் சித்திரை திருவிழா ஏப்.,20ல் கொடியேற்றத்துடன் துவங்கி நடக்கிறது. நேற்று மாலை ராவண கைலாச வாகனத்தில் பிரியா விடையுடன் சந்திரசேகர சுவாமி மற்றும் காமதேனு வாகனத்தில் விசாலாட்சி அம்பிகை பஞ்ச மூர்த்திகளுடன் உலா வந்தனர். இதன்படி மூஞ்சூறு வாகனத்தில் விநாயகர் முன் செல்ல வள்ளி, தெய்வானையுடன் மயில் வாகனத்தில் முருகன் அருள் பாலித்தார். இன்று ரிஷப வாகனத்தில் உலா வரும் நிலையில் நாளை இரவு திக்விஜயம் நடக்கிறது.