மதுரை மீனாட்சி சித்திரை எட்டாம் நாள் திருவிழா
ADDED :167 days ago
சித்திரை திருவிழாவின் எட்டாம் நாளான இன்று மீனாட்சி பட்டாபிஷேக கோலத்தில் சிம்மாசனத்தில் பவனி வருகிறாள்.
மலையத்துவஜ பாண்டியன் நடத்திய புத்திரகாமேஷ்டி யாகத்தில் பார்வதி மூன்று வயது குழந்தையாக தோன்றினாள். தடாதகை எனப் பெயரிட்டு வளர்த்தான் மன்னன். வில், வாள் பயிற்சி, குதிரையேற்றம் போன்ற 64 கலைகளையும் கற்று முடித்தாள். வெற்றி மங்கையான தடாதகை பருவ வயதை அடைந்தாள். மன்னன் மகளுக்கு பட்டம் சூட்டி இளவரசியாக்கினான். இதனால் பாண்டிய நாடு ‘கன்னிநாடு’ என பெயர் பெற்றது.