திருத்தங்கல் கருநெல்லிநாதர் கோயில் தேரோட்டம்
ADDED :49 minutes ago
சிவகாசி: திருத்தங்கல் மீனாட்சி அம்பிகை சமேத கருநெல்லி நாதர் சுவாமி கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது. மீனாட்சி அம்பிகை சமேத கருநெல்லி நாதர் சுவாமி கோயில் சித்திரை திருவிழா ஏப். 19 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. காலையில் சுவாமிகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் சுவாமிகள் தினமும் இரவு 7:00 மணிக்கு ரிஷப வாகனத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் புரிவார். இந்நிலையில் நேற்று தேரோட்டம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் படம் பிடித்து தேர் இழுத்தனர்.