திருத்தணி திரவுபதியம்மன் கோவிலில் அர்ச்சுனன் தபசு
ADDED :7 hours ago
திருத்தணி: திருத்தணி திரவுபதியம்மன் கோவிலில், நேற்று அதிகாலை அர்ச்சுனன் தபசு நிகழ்ச்சி நடந்தது.
திருத்தணி பழைய தர்மராஜா கோவில் தெருவில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில், கடந்த மாதம் 23ம் தேதி தீமிதி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று அதிகாலை 5:00 மணியளவில், கோவில் வளாகத்தில் அர்ச்சுனன் தபசு நிகழ்ச்சி நடந்தது. இதற்காக, 30 அடி உயரமுள்ள பனைமரம் நடப்பட்டு, அதன் உச்சியில் அர்ச்சுனன் தவம்புரிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது, திரளான பெண்கள், பனைமரத்தின் கீழ் அமர்ந்து திருமணம் மற்றும் குழந்தை வரம் வேண்டி வழிபட்டனர். நிகழ்ச்சியில், 1,000த்திற் கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். வரும் 10ம் தேதி காலை, துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியும், மாலை தீமிதி திருவிழாவும் நடைபெற உள்ளது.