உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பச்சைமலை, பவளமலையில் ஜன., 27ல் தைப்பூச திருவிழா

பச்சைமலை, பவளமலையில் ஜன., 27ல் தைப்பூச திருவிழா

கோபிசெட்டிபாளையம்: கோபி பச்சைமலை, பவளமலை கோவில்களில் ஜனவரி, 27ம் தேதி தைப்பூச திருவிழா நடக்கிறது. கோபி பச்சைமலை சுப்பிரமணிய ஸ்வாமி கோவிலில் ஜனவரி, 27ம் தேதி தைப்பூச திருவிழா நடக்கிறது. திருவிழாவை முன்னிட்டு காலை, ஏழு மணிக்கு மகன்யாச அபிஷேகம், காலை, எட்டு மணிக்கு திருப்படித்திருவிழா, 9 மணிக்கு காவடி அபிஷேகம், 10 மணிக்கு அன்னதானம், பகல், 12 மணிக்கு காவடி அபிஷேகம், மாலை, 5.30 மணிக்கு பக்தி கீர்த்தனைகள், இரவு, 7 மணிக்கு தங்கமயில், தங்கரதம் புறப்பாடு நடக்கிறது. வரும், 28ம் தேதி காலை, 10 மணிக்கு வள்ளி, தெய்வானை ஸமேத சுப்பிரமணிய ஸ்வாமி திருக்கல்யாண உற்சவம், பகல் ஒரு மணிக்கு அன்னதானம், மாலை ஆறு மணிக்கு வள்ளி, தெய்வானை ஸமேத சுப்பிரமணிய ஸ்வாமி திருவீதி உலா வருதல், இரவு, 7 மணிக்கு தங்கமயில், தங்கரதம் புறப்பாடு நடக்கிறது.

* பவளமலை முத்துகுமாரசாமி ஸ்வாமி கோவிலில் ஜனவரி, 24ம் தேதி இரவு, 9 மணிக்கு கிராம சாந்தி, 25ம் தேதி காலை, 10 மணிக்கு கொடியேற்றம், மாலை, 4 மணிக்கு யாகசாலை பூஜை துவக்கம், மாலை, 5 மணிக்கு யானை வாகனத்தில் ஸ்வாமி கிரிவீதி உலா வருதல் நடக்கிறது. 26ம் தேதி காலை, எட்டு மணிக்கு மூலவர் அபிஷேகம், காலை, ஒன்பது மணிக்கு இரண்டாம் கால யாக சாலை பூஜை, மாலை, நான்கு மணிக்கு மூன்றாம் கால யாக சாலை பூஜை, மாலை, ஐந்து மணிக்கு ஆட்டுகிடாய் வாகனத்தில் ஸ்வாமி வீதி உலா, மாலை, 6.30 மணிக்கு காவடி அபிஷேகம், அன்னதானம் நடக்கிறது.

27ம் தேதி காலை, ஆறு மணிக்கு முத்து விநாயகருக்கு மகன்யாச அபிஷேகம், காலை, ஏழு மணிக்கு மூலவர் அபிஷேகம், பால் குடம் அபிஷேகம், மகளிர் குழு பதி மாரியம்மன் கோவிலில் இருந்து எடுத்து வருதல், காலை, 9 மணிக்கு நான்காம் கால யாக சாலை பூஜை, 10 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், பகல், 12 மணிக்கு அன்னதானம், மாலை 4 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல், மயில் வாகனத்தில் சுவாமி வீதி உலா எழுந்தருளல், இரவு, 7 மணிக்கு காவடி அபிஷேகம் மற்றும் அன்னதானம் நடக்கிறது. 28ம் தேதி காலை, 11 மணிக்கு ஆறுமுகப் பெருமானுக்கு சிவப்பு சாற்றி சண்முகர் அர்ச்சனை, மாலை, 6 மணிக்கு வள்ளி தெய்வானை சமேத முத்து குமாரசாமி ஸ்வாமி புஷ்ப ரதத்தில் திருவீதி உலா வருதல் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !